செய்திகள்
தொடர் திருட்டை தடுக்க துண்டு பிரசுரங்களை போலீசார் பொதுமக்களிடம் வழங்கியதை படத்தில் காணலாம்.

திருட்டு சம்பவங்கள் எதிரொலி : பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

Published On 2019-12-03 18:03 GMT   |   Update On 2019-12-03 18:03 GMT
பெரம்பலூரில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலியாக, திருட்டை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க பெரம்பலூரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களையும் பிடித்தும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி வழிக்காட்டுதலின் பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார், போலீஸ் ஏட்டுகள் செல்வம், கார்த்திக் மற்றும் போலீசார் பெரம்பலூர் நகரில் திருட்டை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை துண்டுபிரசுரங்களாக பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த துண்டு பிரசுரத்தில் பொதுமக்கள் தங்களது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக எண்ணான 9498100691, போலீஸ் நிலையம் எண்ணான 9498100692, போலீஸ் இன்ஸ்பெக்டர் எண்ணான 9498169024, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் எண்களான 9942245205, 9498190653-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்.

வெளியூர் செல்லும் போது வீட்டில் நகை, பணத்தை வைக்காமலும், ஏ.டி.எம்.கார்டு மற்றும் முக்கிய பத்திர ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து பயன்படுத்தும் வகையிலும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். தங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் மற்றும் சாலையை கவனிக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்கள் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் தந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News