செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-10-09 06:10 GMT   |   Update On 2021-10-09 06:10 GMT
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை:

உடுமலை நகராட்சியில் வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக அரசு அலுவலகங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள், கிணறு, செடிகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் மூடி வைக்க வேண்டும். கொசு உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ரோட்டோரங்கள், கடைகள், வீடுகளில், டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்களில் நன்னீரில் வளரும் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் வீணாக உள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில்:

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் வீடு, கடைகளில் மண் பானை, மீன் தொட்டி, டயர், ஆட்டுக்கல், டப்பா, பாட்டில்கள் என தேவையற்ற பொருட்களை குப்பை சேகரிக்க வரும் நகராட்சி பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். வீடுகளில் உள்ள பிரிட்ஜ்ல் நீர் தேங்காமல் கண்காணித்து கொசு உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News