ஆன்மிகம்
திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு செல்லும் பூக்கள்

திருச்செங்கோட்டிலிருந்து பிரம்மோற்சவ விழாவிற்கு பூஜை பொருட்கள் அனுப்பி வைப்பு

Published On 2020-09-23 04:10 GMT   |   Update On 2020-09-23 04:10 GMT
திருச்செங்கோட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதிக்கு கரும்பு, செவ்வாழை, இளநீர், தென்னம்பாளை மற்றும் பூஜை பொருட்கள் திருமலை திருப்பதிக்கு வேன் மூலம் அனுப்பப்பட்டது.
திருச்செங்கோட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவிற்கு திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் துளசி மற்றும் ரோஜா, மல்லிகை, தாமரை, சாமந்தி பூக்கள் 7 டன் அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பூக்கள் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் கரும்பு, செவ்வாழை, இளநீர், தென்னம்பாளை மற்றும் பூஜை பொருட்கள் திருமலை திருப்பதிக்கு வேன் மூலம் அனுப்பப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் சந்திரசேகரன், கனகராஜ், இளங்கோ, கோவிந்தன், குப்புசாமி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News