செய்திகள்
பிஎட்

தமிழகத்தில் 3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை

Published On 2020-09-17 04:42 GMT   |   Update On 2020-09-17 11:17 GMT
தமிழகத்தில் சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி உள்ளிட்ட 3 அரசு பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 3 இடங்களில் உள்ள அரசு பிஎட் கல்லூரிகளில் 2020-21ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதித்து தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) உத்தரவு பிறப்பித்துள்ளது. போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்காதது மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பழமை வாய்ந்த லேடி வெலிங்டன் கல்லூரி நிர்வாகம், போதிய ஆவணங்களை சமர்ப்பிக்காதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல்  புதுக்கோட்டைஅரசு பிஎட் கல்லூரியில் 16 ஆசிரியர்களுக்கு பதில் 12 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் அரசு பிஎட் கல்லூரியில் 16 ஆசிரியர்களுக்கு பதில் 9 ஆசிரியர்களே இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கல்லூரிகள் குறைபாடுகளை சரிசெய்து 3 மாதத்தில் ஆவணத்தை சமர்பிக்க வேண்டும், அதுவரை தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags:    

Similar News