ஆன்மிகம்
சிவலிங்க வழிபாடு

பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-09-01 08:23 GMT   |   Update On 2020-09-01 08:23 GMT
புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம:
சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம:
சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

பொருள்: இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் ஆழ்ந்த கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனத் தாமரையில் வசிக்கும் யோகியுமான சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News