செய்திகள்
பவன் அகர்வால்

காங்கிரஸ் கூட்டத்தில் இருந்து விரட்டப்பட்ட முன்னாள் தலைவர்- காரணம் இதுதானாம்...

Published On 2021-10-24 14:44 GMT   |   Update On 2021-10-24 14:44 GMT
முதலமைச்சர் பதவி குறித்த சூறாவளி அடங்குவதற்குள் முன்னாள் மாவட்ட தலைவர் அதுகுறித்து பேச, தொண்டர்கள் கோபத்தில் அவரை மேடையில் இருந்து வெளியேற்றினர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பூபேஷ் பாகல் முதலமைச்சராக இருந்து வருகிறார். சமீபத்தில் அம்மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். இதனால் பூபேஷ் பாகல் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்படலாம் என செய்தி வெளியானது.

ஆனால், பூபேஷ் பாகல் முதலமைச்சராக நீடிப்பார் என மேலிடம் அறிவித்தது. இதனால் பிரச்சினை அத்துடன் ஓய்ந்தது.


இந்த நிலையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் ஜாஷ்பூரில் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் விவகாரம் குறித்து முன்னாள் மாவட்ட தலைவர் பவன் அகர்வால் பேசத் தொடங்கினார். அவர், அமைச்சர் டி.எஸ். சிங் டியோ குறித்து பேசியதும், தொண்டர்கள் கோபம் அடைந்தனர்.

நேராக மேடைக்கு வந்த தொண்டர்கள் பவன் அகர்வாலை பேசவிடாமல் தடுத்தனர். மேலும், அவரை சுற்றி வளைத்து தாக்கி, மேடையில் இருந்து வெளியேற்றினர். 

பின்னர் இச்சம்பவம் குறித்து பவன் அகர்வால் கூறுகையில் ‘‘டி.எஸ். சிங் டியோ இரண்டரை வருடமாக முதலமைச்சர் ஆவதற்கு  காத்துக் கொண்டிருந்தார். தற்போது பூபேஷ் பாகல் அவரது முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோது டியோ மற்றும் பாகல் இணைந்து பணியாற்றினர். இதன் மூலமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இதுபற்றி நான் பேசும்போது, என்னை தாக்குகிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News