ஆட்டோமொபைல்

இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள்

Published On 2018-03-23 11:20 GMT   |   Update On 2018-03-23 11:20 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிடி100 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
புதுடெல்லி:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சிடி100 மோட்டார்சைக்கிள் விலையை குறைத்திருக்கிறது. அந்த வகையில் புதிய சிடி100 இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. முன்னதாக பஜாஜ் சிடி100 மலிவு விலை கியர் மோட்டார்சைக்கிளாக இருந்தது. 

டிவிஎஸ் XL 100 தற்சமயம் வரை இந்தியாவின் மலிவு விலை இருசக்கர வாகனமாக இருக்கிறது. பஜாஜ் சிடி100 லாப நோக்கற்ற மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக விற்பனை மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் பஜாஜ் சிடி100 விற்பனை செய்யப்படுகிறது. 

அந்த வகையில் பஜாஜ் சிடி100 விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் சிடி100 பேஸ் வேரியண்ட் விலை ரூ.30,714 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டிவிஎஸ் XL 100 மாடலை விட ரூ.50 குறைவு ஆகும். சிடி100 கே.எஸ். அலாய் மாடலில் கிக் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல்களுடன் ரூ.6,835 வரை விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.31,802 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் சிடி100 டாப் எண்ட் மாடலின் விலை ரூ.39,885 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சிடி100 மாடலில் 99.2சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.08 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8.05 என்.எம். டார்கியூ கொண்டிருக்கிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் பஜாஜ் சிடி100 மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
Tags:    

Similar News