வழிபாடு
சபரிமலை

சபரிமலையில் ஹரிவராசனம்... விளக்கம்

Published On 2021-12-08 08:02 GMT   |   Update On 2021-12-08 08:02 GMT
தற்காலத்தில் சபரிமலையில் இறைவன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டை (உறக்கப்பாட்டு), ஹரிவராசன் என்ற பாடலை, ஸ்ரீ கரம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் அவர்கள் இயற்றி இசை அமைத்ததாகும்.

இரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ஹரிவராசனம் (6) என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் சபரிமலையில் இறைவன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டை (உறக்கப்பாட்டு), ஹரிவராசன் என்ற பாடலை, ஸ்ரீ கரம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் அவர்கள் இயற்றி இசை அமைத்ததாகும்.

ஸ்ரீனிவாச அய்யர் அவர்கள், கோவில், சுவாமி ஐயப்பரின் சன்னிதியில் நின்று கொண்டு, அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்த பாடலை பாடி வந்தார். சுவாமி விமொசானந்தா அவர்களின் முயற்சியால், கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி அவர்கள், இப்பாடலை ஒரு தாலாட்டுப் பாடலாக ஏற்றுக் கொண்டனர்.

இந்தப் பாடல் 352 எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும். (8 செய்யுள் பத்திகள்) (7) அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்த பாடலின் பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடலே ஒலி பரப்பப்படுகின்றது.

Tags:    

Similar News