தொழில்நுட்பம்
போக்கோ எக்ஸ்3 ப்ரோ

போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-03-16 10:50 GMT   |   Update On 2021-03-16 10:50 GMT
போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகமாகிறது.


போக்கோ நிறுவனம் தனது எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ எப்1 மாடலுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போக்கோ எப்1 ஸ்மார்ட்போனினை போன்றே புதிய எக்ஸ்3 மாடலுக்கும் #PROformance ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போக்கோ நிறுவனம் மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச நிகழ்வு பற்றி அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் போக்கோ எப்3 அறிமுகம் செய்யப்படலாம். இது ரெட்மி கே40 மாடலின் சர்வதேச எடிஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

அம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+120Hz AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம். 

இந்த ஸ்மார்ட்போன் பிராஸ்ட் புளூ, பேண்டம் பிளாக் மற்றும் மெட்டல் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 27 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News