ஆன்மிகம்
வீரமாச்சியம்மன்

வடவேடம்பட்டியில் வீரமாச்சியம்மன் கோவில் புரட்டாசி மாத விழா 15-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-10-12 07:47 GMT   |   Update On 2021-10-12 07:47 GMT
வடவேடம்பட்டியில் உள்ள ஸ்ரீவீரநாச்சியம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிழா வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 6 மணிக்கு சுதர்சன ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் வடவேடம்பட்டியில் தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீவீரநாச்சியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மாயம் பெருமாள் பக்த ஆஞ்சநேயர், கருடாழ்வார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத திருவிழா வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 6 மணிக்கு சுதர்சன ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

இதனைதொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு 9மணிக்கு சக்தி கவசம் அணிதல், 10 மணிக்கு மாயம் பெருமாள் சுவாமி இறக்கி கங்கைக்கு புறப்படுதல், இரவு 1.30 மணிக்கு திருமாயம் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 16-ந் தேதி காலை 4 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், 6 மணிக்கு சாமி திருவீதி உலா புறப்படுதல் ஆகியவையும், காலை 11 மணிக்கு கவாளபூஜை, மதியம் 3 மணிக்கு சாமி மலை ஏறுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

17-ந் தேதி காலை 11 மணிக்கு மேல் மறுபூஜை நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News