செய்திகள்
வைகை அணை

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-08-14 10:57 GMT   |   Update On 2021-08-14 10:57 GMT
பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் 69 அடியில் நீடித்த நீர்மட்டம் குறைய தொடங்கியது. எனவே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து 1544 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 68.09 அடியாக உள்ளது. நீர் திறப்பு 1199 கன அடி.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.65 அடியாக உள்ளது. அணைக்கு 639 கன அடி நீர் வருகிறது. 1800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.03 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

தேக்கடி 1.6, கூடலூர் 1.5, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.2, கொடைக்கானல் 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News