உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதிச்சான்று குழுவினர் ஆய்வு

Published On 2022-05-06 04:54 GMT   |   Update On 2022-05-06 04:54 GMT
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு என மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
உடுமலை:

ஆண்டுதோறும் மத்திய மருத்துவக்குழுவினர் தமிழக அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்கின்றனர். அப்போது மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் கண்டறியப்படுகிறது.

குறிப்பாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு என மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு பிரிவுகளின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்து 70 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண்கள் பெற்றால், அம்மருத்துவமனைக்கு தேசிய தர உறுதிச்சான்று வழங்கப்படுகிறது.

அவ்வகையில் மத்திய குழுவினர் 7-ந்தேதி வரை உடுமலை  அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்துகின்றனர். திருவனந்தபுரம் பொதுமருத்துவமனை இயக்குனர் ஹரிகுமார், விஜயவாடா குடும்ப நலம் கமிஷனர் கமலாக்கர்பட்டு, நெல்லூர் அரசு நர்சிங் கல்லூரி முதல்வர் வசுந்தரா ஆகியோர் அடங்கிய குழுவினர் மேம்பாட்டு பணிகளை பார்வையிடுகின்றனர்.

மருத்துவப்பணிகள் துறையினர் கூறுகையில், தேசிய தர உறுதிச்சான்று பெற்றால் மத்திய அரசின் நிதி கிடைக்கும். அதன் வாயிலாக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்  என்றனர்.
Tags:    

Similar News