ஆன்மிகம்
திருமலை வராஹசாமி கோவில்

திருமலையில் வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 29-ந்தேதி நடக்கிறது

Published On 2021-11-25 06:08 GMT   |   Update On 2021-11-25 06:08 GMT
திருமலையில் உள்ள வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 29-ந்தேதி நடக்கிறது. இரவு கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.
திருமலையில் உள்ள வராஹசாமி கோவில் விமான கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி நடந்து வந்தது. அதற்காக, கோவில் முக மண்டபத்தில் வராஹசாமி மாதிரி கோவில் அமைக்கப்பட்டு, அதன் கருவறையில் வராஹசாமி, லட்சுமி தாயாரின் சிலைகளை அத்திமரத்தால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. அங்கு தினமும் வராஹசாமிக்கும், லட்சுமி தாயாருக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்தநிலையில் வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை ஏழுமலையான் கோவிலில் இருந்து விஷ்வக்சேனர் வசந்த மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். வராஹசாமி கோவிலில் இரவு 9.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை அங்குரார்ப்பணம் நடந்தது.

இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை வராஹசாமி கோவில் சன்னதியில் யாக சாலையில் காரியக்கர்மங்கள் நடக்கிறது. இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பிரபந்த பாராயணம், வேத பாராயணம் நடக்கிறது.

நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், மீண்டும் இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் வைதீக காரியக்கர்மங்கள் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வராஹசாமி கோவிலில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

28-ந்தேதி வராஹசாமி கோவில் யாக சாலையில் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை வைதீக காரியக்கர்மங்கள், மாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மகாசாந்தி பூர்ணாஹுதி, மகாசாந்தி திருமஞ்சனம், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை யாக சாலையில் சயனாதி வாசம் ஆகியவை நடக்கிறது.

29-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை பூர்ணாஹுதி, பிரபந்த சாத்துமுறை, வேதபாராயண சாத்துமுறை, காலை 9.15 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை தனுர் லக்னத்தில் கோவில் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News