ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2020-11-04 06:07 GMT   |   Update On 2020-11-04 06:07 GMT
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி பசந்த்குமார், பத்மாவதி தாயார் கோவில் அதிகாரி ஜான்சிலட்சுமி ஆகியோர் கொடிமரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
திருமலை :

திருப்பதி அருகே திருச்சனூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 19-ந் தேதிவரை விழா நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை. எனவே கோவில் வளாகத்திலேயே ஏகாந்தமாக விழா நடத்தப்படுகிறது.

விழாவின் தொடக்கமாக வருகிற 11-ந் தேதி காலையில் கொடியேற்றம் நடக்கிறது. இரவில் சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளுகிறார். 12-ந் தேதி காலையில் பெரிய சேஷ வாகனத்திலும், இரவில் அன்னப்பறவை வாகனத்திலும், 13-ந் தேதி காலை முந்துப்பந்தல் வாகனத்திலும், இரவில் சிம்மவாகனத்திலும் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தினமும் காலையிலும், இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் எழுந்தருளுகிறார்.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. முன்னதாக மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், கிச்சிலிகடா போன்ற பொருட்கள் கலந்த புனிதநீர் கோவில் வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டது. மேலும் கொடிமரம், பூஜை பொருட்கள், கூரைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி பசந்த்குமார், பத்மாவதி தாயார் கோவில் அதிகாரி ஜான்சிலட்சுமி ஆகியோர் கொடிமரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News