செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்- எடப்பாடி பழனிசாமி உறுதி

Published On 2021-03-21 08:41 GMT   |   Update On 2021-03-21 08:41 GMT
அண்ணா மறைந்த பின்னர் குறுக்கு வழியில் முதல்வரானவர் கருணாநிதி என ஆரணியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஆரணி:

எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது வரும் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

அண்ணா மறைவிற்கு பின்னர் நெடுஞ்செழியன்தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் கருணாநிதி முதல்வரானார். நான் குறுக்கு வழியில் முதல்வராக பொறுப்பேற்கவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தனர் என்றார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Tags:    

Similar News