ஆன்மிகம்
உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா

உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா

Published On 2021-09-27 07:20 GMT   |   Update On 2021-09-27 07:20 GMT
உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோவில் புரட்டாசித் திருவிழாவிழவை முன்னிட்டு தினமும் இரவில் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, மற்றும் சிறப்பு அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது.
உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோவில் புரட்டாசித் திருவிழா கடந்த செப்.22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, மற்றும் சிறப்பு அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது.

தினசரி சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வருகின்ற அக்.1-ந் தேதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் பவனி வருதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பெ.சுந்தரஈசன் மற்றும் ஊர்மக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.
Tags:    

Similar News