செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் 9 பேருக்கு கொரோனா

Published On 2021-07-19 10:18 GMT   |   Update On 2021-07-19 10:18 GMT
கடந்த 17 நாட்களில் திருப்பூருக்கு 9 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங் களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சம் பேரும், வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேரும் அடங்குவர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக திருப்பூரில் மூடப்பட்ட பனியன் நிறுவனங்கள் தற்போது தளர்வின் காரணமாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் பலரும் திருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இதுபோல் புதிதாக பலரும் வேலை தேடி வருகிறார்கள். இதனால் அவர்கள் மூலம் திருப்பூரில் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்ப தால் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் வட மாநிலங்களில் இருந்து ரெயிலில் திருப்பூருக்கு வரு கிற தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 17 நாட்களில் திருப்பூருக்கு 9 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் சுகாதாரத்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News