செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது

Published On 2021-02-27 06:41 GMT   |   Update On 2021-02-27 06:41 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ஒரு சவரன் ரூ.34,648-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் கடந்த வாரம் ஏற்ற-தாழ்வு காணப்பட்து. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில் விலை உயர்ந்தது. இதனால் மீண்டும் தங்கம் பவுன் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது.

கடந்த 24-ந்தேதி முதல் விலை குறைந்தது. மறுநாள் தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34 ஆயிரத்து 904க்கு விற்றது.

இந்த நிலையில் இன்று 4-வது நாளாக விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 குறைந்து ரூ.34 ஆயிரத்து 648-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரு.4 ஆயிரத்து 331 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்கிறது.

தங்கம் விலையில் பவுனுக்கு 4 நாட்களில் ரூ.664 குறைந்தது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags:    

Similar News