உள்ளூர் செய்திகள்
கரை ஒதுங்கிய ஆமை

புதுவை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அரியவகை ஆமைகள்

Published On 2022-01-27 03:47 GMT   |   Update On 2022-01-27 03:47 GMT
புதுவை கடற்கரையில் அரியவகை ஆமைகள் இறந்து ஒதுங்கி உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் உள்ள சின்ன வீராம்பட்டினம், பாரடைஸ் பீச், புதுகுப்பம், பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த சில நாட்களாக பெரிய ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. 

வீராம்பட்டினம் பகுதியில் ஒரு ஆமை இறந்து ஒதுங்கிய நிலையில் பாரடைஸ் பீச்சில் 2 ஆமைகள் இறந்து ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

ஆமைகளை பார்வையிட்ட  வனத்துறை  ஊழியர்கள் இறந்து ஒதுங்கிய ஆமைகள் ஆலிவ் ரெட்லி இனத்தை சேர்ந்தவை ஆகும். இவை இனப் பெருக்கத்திற்காக பல கடல் மைல்கள் கடந்து புதுவைக்கு வந்து செல்லும். 

அப்படி வந்த ஆமைகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் படகில் அடிபட்டு இறந்து கரை ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர். 

ஆமைகள் ஒதுங்கிய பகுதி சுற்றுலா தலம் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அச்சபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறை ஊழி யர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News