செய்திகள்
கலந்தாய்வு கூட்டம்.

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வேலை வழங்கக்கூடாது-போலீஸ் கமிஷனர் உத்தரவு

Published On 2021-07-24 10:52 GMT   |   Update On 2021-07-24 10:52 GMT
தமிழகத்தின் கொரோனா தொற்று அதிகம் உள்ள 7 மாவட்டங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது.
திருப்பூர்:

திருப்பூரில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது மாநகர போலீஷ் கமிஷனர் வனிதா பேசியதாவது:-
தமிழகத்தின் கொரோனா தொற்று அதிகம் உள்ள 7 மாவட்டங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது. வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை வருகை அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது 25 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டுகளில் தொழில்நகரமான திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி தான் கொரோனாவை வெல்லும் ஆயுதம். தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். 3-ம் அலையில் குழந்தைகளும் பாதிக்கும் என மருத்துவ உலகம் சொல்வதால், நாம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். 

தடுப்பூசியைத் தவிர வேறு வழியில்லை. தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் நிறுவனங்களில் வேலைக்கு அனுமதிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைவரின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News