செய்திகள்
கோத்தபய ராஜபக்சே - அன்புமணி ராமதாஸ்

கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானதால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அன்புமணி ராமதாஸ்

Published On 2019-11-18 09:03 GMT   |   Update On 2019-11-18 11:37 GMT
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராக வெற்றி பெற்றிருப்பது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-



கோத்தபய ராஜபக்சே இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அப்படிப்பட்ட கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் அதிபராக வெற்றி பெற்றிருப்பது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல். இனி இலங்கையில் உள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைத்தால் தென்இந்தியாவில் வறட்சி ஏற்படாது.

இது குறித்து ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது கோரிக்கை வைத்தேன். தற்போது தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்து வலியுறுத்த உள்ளேன்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாநில துணைப் பொதுச்செயலாளர் செல்வராஜ், தலைமை நிலைய பேச்சாளர் செல்வக்குமார், மாவட்ட செயலாளர் குபேந்திரன், தலைவர் டில்லிபாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், பாலாஜி, பசுமை தாயகம் முத்து, கட்சி பிரமுகர் இசக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News