லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் டிலைட்

குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் டிலைட்

Published On 2021-07-08 09:36 GMT   |   Update On 2021-07-08 09:36 GMT
கேரட்டில் பாயாசம், அல்வா. ஜூஸ் போன்ற சத்தான உணவு வகைகளை சுவையாக தயார் செய்து அனைவரையும் கவர முடியும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கேரட் டிலைட்.
தேவையான பொருட்கள்

நறுக்கிய கேரட் - அரை கிலோ
சர்க்கரை - அரை கப்
சோள மாவு - கால் கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

அலங்கரிக்க தேவையான பொருட்கள்

கொப்பரை தேங்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

குக்கரில் நறுக்கிய கேரட்டை போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். கேரட்  ஆறியவுடன் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, சோள மாவு கலந்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்க வேண்டும். பின்பு அதை
கேரட்
விழுதுடன் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கேரட் கலவையை அதில் கொட்டி நன்றாக கிளற வேண்டும்.

அவ்வப்போது சிறிது நெய் சேர்ப்பதுடன் பாத்திரத்தில் ஒட்டி கொள்ளாதவாறும் கிளறி விட வேண்டும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் கலவை நன்றாக திரண்டு வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி அதில் பரவலாக கலவையை கொட்டவும். சிறிது நேரத்தில் சூடு ஆறியதும் தேவையான வடிவத்தில் அதை துண்டு போட்டு கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய் பொடி மற்றும் பொடித்த சர்க்கரையை ஒன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள துண்டுகளின் மீது அதை தூவினால் சுவையான கேரட் டிலைட் தயார்.
Tags:    

Similar News