உள்ளூர் செய்திகள்
போராட்டம்

நாகர்கோவிலில் இலவச வீடு வழங்க கேட்டு பெண்கள் திடீர் போராட்டம்

Published On 2022-05-06 09:52 GMT   |   Update On 2022-05-06 09:52 GMT
நாகர்கோவிலில் இலவச வீடு வழங்க கேட்டு பெண்கள் திடீர் போராட்டம் - போலீசாருடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
நாகர்கோவில்:

குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் அரசின் திட்டத்தின் இலவசமாக வீடு வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு இடங்களில் வீடுகள் கட்டி நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்,  அது வரையிலும் வீடுகளை அகற்றும் அரசின் முயற்சி களை கைவிட வேண்டும், நீண்டகாலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசி னார். மாநில குழு உறுப்பினர் லீமாரோஸ், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் தங்கமோகன், கண்ணன், அந்தோணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னார்கள்.  ஆர்ப்பாட்டத்தில் அண்ணாதுரை, சேகர், ஸ்டாலின் தாஸ், அனந்த சேகர், மோகன், மைக்கேல், ராஜ் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பி னார்கள். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக வாசலில் நின்ற போலீசார் மனு கொடுக்க வந்த பொது மக்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.அப்போது சிறிது  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிலர் கலெக்டர் அலுவலக வாசலில் வந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கோரிக்கை மனு வழங்கினார்கள்.
Tags:    

Similar News