செய்திகள்
திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருமலை- திருப்பதி தேவஸ்தான விடுதி கட்டணம் உயர்ந்தது

Published On 2019-11-09 05:16 GMT   |   Update On 2019-11-09 05:16 GMT
திருமலை- திருப்பதி தேவஸ்தான விடுதி கட்டணம் உயர்வு நேற்று முன்தினத்தில் இருந்து அமலுக்கு வந்தது.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானத்துக்கு சொந்தமான விடுதிகளில் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் கவுஸ்தபம், பாஞ்சதான்யம் ஆகிய விடுதிகளில் ஒருநாள் வாடகையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நந்தகம் விடுதியில் ஒருநாள் வாடகையாக ரூ.600 வசூலிக்கப்பட்டது. தற்போது அதில் ஒருநாள் வாடகையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நேற்று முன்தினத்தில் இருந்து அமலுக்கு வந்தது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டுள்ளனர்.

மேலும் கருடாத்திரி காட்டேஜ், அஞ்சனாத்திரி காட்டேஜ் ஆகியவற்றில் ஒருநாள் வாடகையாக ரூ.150 நிர்ணய நடவடிக்கை விரைவில் அமலுக்கு வர உள்ளது. அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News