ஆன்மிகம்
தசரா விழா

தசரா விழா கொடியேற்றத்துக்கு அனுமதி அளிக்க பக்தர்கள் கோரிக்கை

Published On 2021-09-03 05:08 GMT   |   Update On 2021-09-03 05:08 GMT
தென் இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு நிகராக தமிழகத்தில் நெல்லை பாளையங்கோட்டையில் தசரா விழா 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பாளையங்கோட்டை அனைத்து கோவில் தசரா விழா கூட்டமைப்பு தலைவர் கனகசுப்பிரமணியன், செயலாளர் மனகாவலம், பொருளாளர் சாய்முருகன், நிர்வாகி ராஜீவ்காந்தி மற்றும் பக்தர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தென் இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு நிகராக தமிழகத்தில் நெல்லை பாளையங்கோட்டையில் தசரா விழா 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முப்புடாதி, தென் பகுதி முத்தாரம்மன், விசுவகர்ம உச்சினிமாகாளி, வடபகுதி முத்தாரம்மன், யாதவர் உச்சினி மாகாளி, தூத்துவாரி அம்மன், வடபகுதி உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு பகுதி உச்சினிமாகாளி அம்மன், தேவி உலகம்மன், தேவி புது உலகம்மன் ஆகிய 12 அம்மன் கோவில்களிலும் தசரா திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆவணி மாதம் அமாவாசை நாளில் கால்நாட்டி, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையில் சப்பர வீதிஉலாவுடன் விழா நடைபெறும்.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு நடைமுறைகள் உள்ளதால் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அம்மன் கோவில்களிலும் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதலுக்கு ஏற்ப பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை வழிபட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, விழா நடைபெற அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News