தொழில்நுட்பம்
டெக்னோ ஸ்பார்க் 5

குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்

Published On 2020-05-05 08:02 GMT   |   Update On 2020-05-05 08:02 GMT
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



டெக்னோ பிராண்டின் புதிய டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஹைஒஎஸ் 6.1 இயங்குதளம், 6.6 இன்ச் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் நான்காவது கேமரா சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவாட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.



டெக்னோ ஸ்பார்க் 5 சிறப்பம்சங்கள்

- 6.6 இன்ச் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஹைஒஎஸ் 6.1
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி  
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா 
- 2 எம்பி டெப்த் சென்சார்
- நான்காவது கேமரா சென்சார், குவாட் எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- 4ஜி வோல்ட்இ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்

புதிய டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மிஸ்டி கிரீன், வகேஷன் புளூ, ஐஸ் ஜாடெய்ட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. தற்சமயம் கானாவில் விற்பனைக்கு வந்திருக்கும் ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் விலை GHS720 இந்திய மதிப்பில் ரூ. 9,390 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை.
Tags:    

Similar News