தொழில்நுட்பம்
கேலக்ஸி எஸ்20 சீரிஸ்

ஆப்பிள் ஸ்டைலில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2020-11-02 04:16 GMT   |   Update On 2020-11-02 04:16 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆப்பிள் ஸ்டைலில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் மற்றும் இயர்போன்களை வழங்கவில்லை. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனமும் ஆப்பிள் வழியை பின்பற்றலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களில் சார்ஜர் மற்றும் இயர்போன் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு ஆப்பிள் போன்றே சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணத்தை முன்வைக்கும் என தெரிகிறது.



ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டின் போது சாம்சங் நிறுவனம் ஆப்பிளை சீண்டும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது. முந்தைய காலகட்டங்களில் ஆப்பிள் புதிய முயற்சிகளுக்கு சாம்சங் காட்டம் தெரிவித்து, பின் அதே நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. 

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விலையை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் விலையும் இதே போன்றே நிர்ணயம் செய்து இருக்கிறது.
Tags:    

Similar News