லைஃப்ஸ்டைல்
ஆசையாய் வாங்கிய ஆடையில் தேநீர் கறை

ஆசையாய் வாங்கிய ஆடையில் தேநீர் கறையா? கவலைய விடுங்க சூப்பர் மேஜிக் இருக்கு..

Published On 2021-03-09 06:39 GMT   |   Update On 2021-03-09 06:39 GMT
சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
சில நேரங்களில் தேநீர் அல்லது காபி கைதவறி ஆடையில் பட்டுவிட்டால் உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் இழக்கக்கூடும். ஏனெனில் இந்த கறைகள் விரைவில் மறையாது. ஒரு சில வீட்டு குறிப்புகளை பின்பற்றினால் இக்கறைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

ஒரு கோப்பையில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கறை மீது நேரடியாக ஊற்றவும். தொடர்ந்து 10-15 விநாடிகளுக்கு மெதுவாக ஊற்றிக் கொண்டே இருங்கள், பின்னர் சலவை சோப்பு கொண்டு துவையுங்கள். கறை மங்கிவிடும் வரை சோப்பு தேய்க்கவும். கடைசியாக, சாதாரண தண்ணீரில் அலசுங்கள், கறை மறைந்துவிடும்.

வினிகர் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி உங்கள் துணிகளில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. ஒரு ஸ்ப்ரே பாட்டில் ½ கப் வினிகர் மற்றும் ½ கப் தண்ணீர் எடுத்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை கறை மீது நேரடியாக தெளிக்கவும். 5-7 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் தெளிக்கவும். இப்போது உங்கள் துணியை தண்ணீரில் நனைத்து, நன்கு தேய்த்து அலசவும். தேநீர் அல்லது காபி கறைகள் சுத்தமாக நீங்கி விடுவதை நீங்கள் காண்பீர்கள்.

பேக்கிங் சோடா ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. உண்மையில், பிடிவாதமான தேநீர் கறையில் இருந்து விடுபட பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இருப்பினும், மென்மையான துணிகளில் இதை முயற்சிக்க வேண்டாம். இதற்கு முதலில் அரை வாளி தண்ணீரை மிதமாக சூடு செய்து கொள்ளவும். இந்த தண்ணீரில் உங்கள் கறை துணியை 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை நேரடியாக கறை மீது போடவும். கறையை அகற்ற துணியை நன்கு இரண்டு கைகளால் தேய்க்கவும். பின்னர் அந்த துணியை சாதாரண தண்ணீரில் அலசி விடுங்கள் கறை மறைந்துவிடும்.
Tags:    

Similar News