ஆன்மிகம்
வாராகி

பஞ்சமி திதி... வாராகியை விரதம் இருந்து வழிபாடு செய்தால்...

Published On 2020-10-13 04:29 GMT   |   Update On 2020-10-13 04:29 GMT
பஞ்சமியும் செவ்வாயும் இணைந்த நாளில், வாராகி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வளமும் நலமும் பலமும் அருளும் தந்து காப்பாள் தேவி.
செவ்வாய்க்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய நாள். முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள். இந்தநாளில் அம்பாள் வழிபாடு அருள் சேர்க்கும். பொருள் கொடுக்கும். தீயதை அழிக்கும். நல்லனவற்றையெல்லாம் வழங்கும் என்பார்கள். அதனால்தான், செவ்வாய்க்கிழமைகளில், அம்மன் கோயில்களுக்கு ஏராளமானவர்கள் வந்து தரிசித்து பூஜிப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் காலையும் மாலையும் அவசியம் விளக்கேற்றி, அம்பாள் ஆராதனை செய்யவேண்டும்.

அதேபோல், அம்பாளுக்கும் பெண் தெய்வங்களுக்கும் உகந்தது சிகப்பு நிற மலர்கள். எனவே செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுவது இன்னும் விசேஷமானது.
சதுர்த்தி திதி என்பது விநாயகருக்கு உகந்தது. ஏகாதசி என்பது பெருமாளுக்கு உகந்தது. சஷ்டி திதி என்பது முருகப் பெருமானுக்கு உகந்தது. திரயோதசி திதி என்பது சிவபெருமானுக்கு உகந்தது. அஷ்டமி திதி என்பது காலபைரவரை வழிபடுவதற்கு உரிய நாள். அதேபோல், பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள்.

சப்தமாதர்களில் ஒருத்தி வாராகிதேவி. பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராகி தேவியை வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்குவாள். இன்னல்களையெல்லாம் போக்கி அருளுவாள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வாள். தீயசக்திகளை நெருங்கவிடாமல் காத்தருள்வாள் வாராஹி தேவி.

பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராகியை வழிபடுங்கள். நம் பஞ்சத்தையெல்லாம் போக்கியருளுவாள். சுபிட்சத்தை தந்தருள்வாள் தேவி. தோஷங்கள் அனைத்தையும் விலக்கி, சந்தோஷத்தைப் பெருக்கித் தருவாள் வாராகியம்மன்.
Tags:    

Similar News