சமையல்
முட்டைகோஸ் சட்னி

உடல் எடையை குறைக்க உதவும் முட்டைகோஸ் சட்னி

Published On 2022-03-27 05:21 GMT   |   Update On 2022-03-27 05:21 GMT
வாரத்திற்கு ஒரு மூன்று முறையாவது முட்டைகோஸ் உணவுகளை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலிலுள்ள நச்சுகழிவுகள் நீங்கும். முட்டை கோஸ் தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்பார்வை மேம்படும்.
தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - 1 கப்
பெ.வெங்காயம் - 1
தக்காளி - 1/2
பூண்டு - 2 பல்
சிகப்பு மிளகாய் - 2
புளி - மிக சிறிய அளவு
உ.பருப்பு - 1 மேஜைக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

செய்முறை

முட்டைக்கோஸை நல்லா கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பை போட்டு வறுத்த பின்னர்  சிவப்பு மிளகாய்,வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி போட்டு நல்லா வதக்கவும்.

பின்னர் கோஸை போட்டு வதக்கவும்.

ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.

சூப்பரான முட்டைகோஸ் சட்னி ரெடி.

இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.
Tags:    

Similar News