ஆன்மிகம்
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-09-16 07:14 GMT   |   Update On 2019-09-16 07:14 GMT
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடி திருவிழா 13 வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது 9-வது வாரமாக நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் தேவி கருமாரியம்மன் எழுந்தருளினார்.

பின்னர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். சன்னதி தெரு, தம்புசாமி நகர், தேரோடும் வீதி, கோலடி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தின்போது மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பல்வேறு கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் காவேரி செய்து இருந்தார்.

முன்னாள் அறங்காவலர் ரமேஷ் உள்பட சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அசம்பாவிதங்களை தடுக்க திருவேற்காடு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News