உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி கையிருப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 88,510 கொரோனா தடுப்பூசி கையிருப்பு

Published On 2022-01-23 07:52 GMT   |   Update On 2022-01-23 07:52 GMT
சிவகங்கை மாவட்டத்தில் 88,510 கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை

சிவகங்கை சோலை நகரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 16&ந்தேதி முதல் இந்த ஆண்டு 20ந்தேதி வரை மொத்தம் 16 லட்சத்து 69 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 9 லட்சத்து 99 ஆயிரத்து 136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட 49 ஆயிரத்து 145 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

தற்போது கோவிஷீல்டு 69 ஆயிரத்து 430 டோசும், கோவாக்சின் தடுப்பூசி 19 ஆயிரத்து 80 டோசும் சேர்த்து மொத்தம் 88 ஆயிரத்து 510 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது.

கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முழுமையாக தங்களது முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி மருந்துகளை செலுத்திக்கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News