செய்திகள்
பெரிய வெங்காயம் விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-10-21 04:58 GMT   |   Update On 2020-10-21 04:58 GMT
சென்னையில் கிலோ ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
சென்னை:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யும் மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லாரி, லாரியாக காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சமையலின் முக்கிய ஆதாரமாக திகழும் பெரிய வெங்காயத்தின்(பல்லாரி) விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து உள்ளது. இந்த விலையேற்றமானது மக்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.

இந்நிலையில் பெரிய வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை இன்று தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டை கடையில் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

பெரிய வெங்காயம்  விலை ரூ.100ஐ தாண்டியதால் மக்கள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 150 டன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
Tags:    

Similar News