ஆட்டோமொபைல்
வாட்டர் டாக்சி

கேரளாவில் விரைவில் வாட்டர் டாக்சி சேவை

Published On 2020-09-17 07:43 GMT   |   Update On 2020-09-17 07:43 GMT
கேரளா அரசாங்கம் தண்ணீரில் போக்குவரத்து சேவையை துவங்க இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


கேரள மாநிலத்தில் தண்ணீர் போக்குவரத்து சேவை துவங்கப்பட இருக்கிறது. இதில் பத்து பேர் அமரக்கூடிய படுகுகளை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. புதிய போக்குவரத்து முறை வாட்டர் டாக்சி என அழைக்கப்படுகிறது.

புதிய வாட்டர் டாக்சி கொண்டு கேரள மாநிலத்திற்குள் பொது மக்கள் படகுகளில் பயணிக்க முடியும். வாட்டர் டாக்சி சேவை இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஆலப்புழா மாவட்டத்தில் நான்கு படகுகள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட இருக்கிறது.



கேரளா மாநிலத்தின் தண்ணீர் போக்குவரத்து துறை இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் நான்கு படகுகள் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட இருக்கின்றன.

வாட்டர் டாக்சி சேவை முதற்கட்டமாக ஆலப்புழா மாவட்டத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்பட இருக்கிறது. இந்த சேவைக்கான கட்டண விவரங்களை அம்மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை. எனினும், இது மற்ற போக்குவரத்தை விட குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News