சமையல்
காலிஃப்ளவர் சூப்

நார்ச்சத்து நிறைந்த காலிஃப்ளவர் சூப்

Published On 2022-04-15 05:34 GMT   |   Update On 2022-04-15 05:34 GMT
ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1,
பால் – ஒரு கப்,
மிளகுத்தூள் – சிறிதளவு,
கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 5 பல்,
வெண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பூவை மட்டும் எடுத்து துருவிக்கொள்ளவும்.

காலிஃப்ளவர் தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.

இப்போது சத்தான சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி.
Tags:    

Similar News