தொழில்நுட்பம்
மேஜிக் கீபோர்டு

ஐபேட் ப்ரோவுக்கான மேஜிக் கீபோர்டு இந்திய விலை அறிவிப்பு

Published On 2020-04-17 07:32 GMT   |   Update On 2020-04-17 07:32 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ப்ரோ மாடலுக்கான மேஜிக் கீபோர்டு இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் மேம்பட்ட பிராசஸர், லிடார் சென்சார், கீபோர்டு, மவுஸ் சப்போர்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பில்ட் இன் டிராக்பேட் கொண்ட புதிய மேஜிக் கீபோர்டு ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தற்சமயம் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபேட் ஓஎஸ் இயங்குதளத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஐஓஎஸ் 13.4 இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் மவுஸ் சப்போர்ட் வழங்கி இருக்கிறது. இதை கொண்டு ஐபேட் ப்ரோ மாடலை மிக சுலபமாக இயக்க முடியும். கீபோர்டு கொண்டு டெக்ஸ்ட் எடிட், ஸ்பிரெட்ஷீட் உள்ளிட்டவற்றை இயக்க முடியும்.



ஐபேட் ப்ரோ 11 இன்ச் மாடலுக்கான மேஜிக் கீபோர்டு விலை ரூ. 27900 என்றும், 12.9 இன்ச் மாடலுக்கான மேஜிக் கீபோர்டு விலை ரூ. 31900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதில் 30 மொழிகளுக்கான லே-அவுட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 11 இன்ச் ஐபேட் ப்ரோ வைபை மாடல் விலை ரூ. 71900 என்றும், வைபை+செல்லுலார் மாடல் விலை ரூ. 85,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ வைபை மாடல் விலை ரூ. 89900 என்றும் வைபை+செல்லுலார் மாடல் விலை ரூ. 103900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் அறிமுகமான இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ. 10900 என்றும் மேம்மபட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ 11 இன்ச் மாடலுக்கான விலை ரூ. 7500 என்றும் 12.9 இன்ச் மாடலுக்கான விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News