செய்திகள்
கமல்பிரீத் கவூர்

வட்டு எறியும் இறுதிப்போட்டி இன்று: 4-வது பதக்கத்தை கமல்பிரீத் கவூர் பெற்று கொடுப்பாரா?

Published On 2021-08-02 06:20 GMT   |   Update On 2021-08-02 06:20 GMT
வட்டு எறியும் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை கமல்பிரீத் கவூர் பெற்றுக்கொடுப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை பெற்று உள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் பெற்றார். குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா அரை இறுதிக்கு நுழைந்ததன் மூலம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கல பதக்கம் பெற்று கொடுத்து பெருமை சேர்த்தார்.

இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை தடகள வீராங்கனை கமல்பிரீத் கவூர் பெற்றுக்கொடுப்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டு எறியும் வீராங்கனையான அவர் தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் பங்கேற்கும் இறுதிப்போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

கமல்பிரீத் கவூர் தகுதிச் சுற்றில் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்தார். இதேநிலையை அவர் இறுதிப்போட்டியில் செயல்படுத்தினால் பதக்க வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் அவர் 66.59 மீட்டர் தூரம் எறிந்ததே சிறந்த நிலையாகும். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கமல்பிரீத் கவூர் தர வரிசையில் 32-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News