செய்திகள்
சாங்ஹோங் ஷாங் (நடுவில் இருப்பவர்)

பளுதூக்குதல், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றது சீனா

Published On 2021-08-02 10:35 GMT   |   Update On 2021-08-02 10:35 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல், பளுதூக்குதல் போட்டிகளில் சீனா தங்கம் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சீனா தங்கம் வென்றது. சீனாவின் சாங்ஹோங் ஷாங் 466 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் 466 புள்ளிகளுடன் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைப் படைத்து அசத்தினார். ரஷ்யா வீரர் செர்கே காமென்ஸ்கி 464.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். செர்பிய வீரர் மிலென்கோ செபிக் 448.2 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 87 கிலோ எடைப்பிரிவு குரூப் ‘ஏ’ பளுதூக்குதல் போட்டியில் சீன வீராங்கனை வாங் ஸ்னாட்ச் முறையில் 120 கிலோ, க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 150 கிலோ என மொத்தம் 270 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.



ஈகுவடார் வீராங்கனை யஜைரா தமரா 113+150 என 263 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். டொமினிக்கன் ரிபப்ளிக் வீராங்கனை சான்டனா 116+140 என 256 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
Tags:    

Similar News