வழிபாடு
பிரத்யங்கிரா தேவி

திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் நாளை நடக்கிறது

Published On 2021-12-03 08:42 GMT   |   Update On 2021-12-03 08:42 GMT
கும்பகோணம் திருவிசநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை(சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு நிகும்பலா யாகம் நடைபெறுகிறது.
கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு பிரத்யங்கிரா தேவி ஐந்து முகத்துடன் 12 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை(சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு நிகும்பலா யாகம் நடைபெறுகிறது.

முன்னதாக குபேர விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகளும், சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகிறது. கோவில் ஸ்தாபகர் கணேஷ்குமார் குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகி நந்தினிகணேஷ்குமார் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News