செய்திகள்
வைகை அணை

58 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

Published On 2021-10-23 11:19 GMT   |   Update On 2021-10-23 11:19 GMT
முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் 58 அடியை நெருங்கி வருகிறது.
கூடலூர்:

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனையடுத்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.75 அடியாக உள்ளது. வரத்து 3011 கனஅடியாகவும், திறப்பு 2150 கனஅடியாகவும் உள்ளது. இருப்பு 6055 மி.கனஅடியாக உள்ளது.

கூடுதல் தண்ணீர் திறப்பின் காரணமாக லோயர்கேம்பில் உள்ள பெரியாறு மின்நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 57.35 அடியாக உள்ளது. வரத்து 2220 கனஅடி, நேற்றுவரை 1119 கனஅடி மட்டுமே திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 1319 கனஅடியாக அதிகரிககப்பட்டுள்ளது. நீர்இருப்பு 3115 மி.கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 300 கனஅடி, திறப்பு 300 கனஅடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.34 அடி, வரத்து 50 கனஅடி, திறப்பு 50 கனஅடி.
Tags:    

Similar News