செய்திகள்
ஜக்கி வாசுதேவ்

அமெரிக்காவின் 15 மாகாணங்களுக்கு ஜக்கி வாசுதேவ், மோட்டார் சைக்கிளில் பயணம்

Published On 2020-09-19 02:31 GMT   |   Update On 2020-09-19 02:31 GMT
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அமெரிக்காவின் 15 மாகாணங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறார்.
சென்னை:

ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க பூர்வகுடி மக்களின் ஆன்மிக கலாசாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அமெரிக்காவின் 15 மாகாணங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறார். இந்த பயணத்தை மகாளய அமாவாசை தினத்தன்று டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கினார்.

சுமார் 9 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் அவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். ஒரு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம் 15-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆய்வாளர்களின் வருகைக்கு முன்பான அமெரிக்காவின் பூர்வ மரபினை பற்றிய ஆய்வு பயணமாக அமைய இருக்கிறது. அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான ஆன்மிக ரீதியான ஒற்றுமைகள் குறித்து அறிந்து கொள்ளவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News