செய்திகள்
ஆர் அசோக்

காங்கிரசில் சித்தராமையா- டி.கே.சிவக்குமார் இடையே போட்டி: மந்திரி ஆர்.அசோக்

Published On 2020-12-15 01:53 GMT   |   Update On 2020-12-15 01:53 GMT
காங்கிரசில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக ருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பெங்களூரு :

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதற்கு முன்பு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோடிஹள்ளி சந்திரசேகர் போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிடுகிறார். அவர் வில்லனை போல் நடந்து கொள்கிறார். அவருக்கு எதிராக மக்கள் கொதித்து எழுவார்கள். போராட்டம் நடத்துபவர்களுக்கு யார் தலைவர் என்பதே தெரியவில்லை. ஆளுக்கொரு கருத்துகளை கூறுகிறார்கள். ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் அனந்த சுப்பாராவ் யார் என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். சிலர் கோடிஹள்ளி சந்திரசேகருக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களின் பைத்தியக்கார நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எங்கு போராட்டம் நடைபெற்றாலும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆஜராகிறார். சித்தராமையாவுக்கு முன்பு நாம் கருத்து கூறிவிட வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் நினைக்கிறார். சித்தராமையா முதலில் பேசிவிட்டால் தனது கருத்து குறித்து பத்திரிகைகளில் செய்தி வராது என்று அவர் நினைக்கிறார்.

இதனால் காங்கிரசில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இதில் அந்த ஊழியர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். எனது வீட்டுக்கு வந்து போக்குவரத்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பேசினர். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் சிலரின் அழுத்தத்திற்கு பணிந்து வேலை நிறுத்தத்தை தொடர அவர்கள் முடிவு செய்தனர்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
Tags:    

Similar News