செய்திகள்
தூத்துக்குடியில் ரொட்டித்தூள்களை பயன்படுத்தி மீன் பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது

தூத்துக்குடியில் மீன் பொருட்கள் தயாரிப்பது குறித்து பெண்களுக்கு பயிற்சி

Published On 2021-07-19 12:23 GMT   |   Update On 2021-07-19 12:23 GMT
பயிற்சியின்போது, மீன் குச்சி, மீன் பர்கர், மீன் கட்லெட், மீன் கோலா உருண்டைகள் செய்வது குறித்த செயல் விளக்க பயிற்சியும், மீன் ஊறுகாய் தயாரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஈரமாவு, ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருட்கள் தயாரிப்பது குறித்த தொழில்நுட்ப செயல் விளக்க பயிற்சி முகாம் 3 நாட்கள் நடந்தது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டியல் இன சமூகம் மற்றும் பகுதி திட்ட நிதியுதவியுடன் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதிகளை சேர்ந்த 20 பட்டியலினப் பெண்கள் பங்கேற்றனர்.

முகாமை மீன்வளக் கல்லூரி முதல்வர் சுஜாத்குமார் தொடங்கி வைத்தார். பயிற்சியின்போது, மீன் குச்சி, மீன் பர்கர், மீன் கட்லெட், மீன் கோலா உருண்டைகள் செய்வது குறித்த செயல் விளக்க பயிற்சியும், மீன் ஊறுகாய் தயாரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைத் தலைவர் சாந்தகுமார், உதவி பேராசிரியர் அருள்ஒளி, மீன்பதனத் தொழில்நுட்பத் துறை உதவிப்பேராசிரியர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News