தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் 8டி

முந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி

Published On 2020-09-24 04:09 GMT   |   Update On 2020-09-24 04:09 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விலை முந்தைய மாடலை விட குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் கொண்ட 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலை அமேசானில் தவறுதலாக பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டது.



அதன்படி ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் 599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 51,559 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இது ஒன்பிளஸ் 8 ஐரோப்பிய வெர்ஷனை விட 50 யூரோக்கள் வரை குறைவு ஆகும். 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஒன்பிளஸ் 8டி மாடலில் 6.5 இன்ச் 120Hz FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி சென்சார், 5 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News