செய்திகள்
ஸ்டேல் ஸ்டெயின்

இந்திய தொடரில் ஸ்டெயினுக்கு இடம் கொடுக்காதது ஏன்?: தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு விளக்கம்

Published On 2019-08-14 10:30 GMT   |   Update On 2019-08-14 10:30 GMT
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ஸ்டெயின் இடம் பெறாதது ஏன்? என்பது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு விளக்கம் அளித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சமீபத்தில் இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்றார்.

இந்நிலையில்தான் இந்தியாவுக்கு எதிரான டி20 அணி அறிவிக்கப்பட்டது. குயின்டன் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயினுக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால் ஸ்டெயின் அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தேர்வுக்குழுவினர் மீது மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார். ஸ்டெயின் குற்றச்சாட்டுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பொறுப்பு இயக்குனர் கொர்ரி வான் ஜைல் பதில் அளித்துள்ளார்.

கொர்ரி வான் ஜைல் டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘மருத்துவ ரீதியாக அவர் இன்னும் தயாராகவில்லை. எங்களுடைய தகவல் மிகவும்  தெளிவாக உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News