செய்திகள்
விஜய் கோகலே

ஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி பாருங்கள்- இம்ரான்கானுக்கு இந்தியா சவால்

Published On 2019-09-20 02:04 GMT   |   Update On 2019-09-20 02:04 GMT
காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசப்போவதாக வெளியான தகவலுக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி :

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசப்போவதாக வெளியான தகவல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “ எழுப்ப விரும்பினால் எழுப்பி பார்க்கட்டும். அதை வரவேற்போம்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “முக்கியமான பொருளாதார நாடு, பொறுப்பு வாய்ந்த ஐ.நா. சபை உறுப்பினர் என்ற முறையில், உலக அளவில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதை பிரதமர் எடுத்து வைப்பார்” என்று கூறினார்.

அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்தி பறக்க அனுமதி மறுக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த விஜய் கோகலே, “ ஒரு நாடு, மற்றொரு நாட்டின் தலைவர் தங்களது விமான வான்வழியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுப்பது என்பது துரதிர்ஷ்டவசமானது” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News