உள்ளூர் செய்திகள்
அழகர்

மண்டகப்படிக்கு வராததால் ஏமாற்றம் அடைந்த உபயதாரர்கள்

Published On 2022-04-17 09:14 GMT   |   Update On 2022-04-17 09:14 GMT
கள்ளழகரை மண்டகப்படிக்கு கொண்டுவராததால் உபயதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை

மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற  திருவிழா. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட வில்லை. தற்போது இந்த வருடம்  கொண்டாடப்பட்டதால் பக்தர்களும், ஆன்மிகச் செம்மல்களும், பொதுமக்களும்மிகுந்த உற்சாகம்  அடைந்தனர்.  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. 

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் முன்பு ஒவ்வொரு மண்டகப்படிபடிக்கு சென்று மண்டகப்படி உபயதாரர்களுக்கு பக்தர்களுக்கும் காட்சி அளிப்பார். ஆனால் நேற்று எவ்வித மண்டகப்படிக்கு செல்லாமல் நேரடியாக ஆற்றில் இறங்கினார். 

இது உபயதாரர்களுக்கும், பக்தர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி கேட்டதற்கு கோவில்  நிர்வாகத்திடம் கேட்டபோது சுவாமி அழகர் காலை 5:50 மணிக்கு ஆற்றில் இறங்கவேண்டும். ஆனால் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து 4 மணிக்கே புறப்பட்டது. இதனால் காலதாமதம் ஆகிவிட்டது. 

ஒவ்வொரு மண்டகப்படிக்கு சென்றால் நேரம் அதிகமாயிடும், குறிப்பிட்ட நேரத்தில் அழகர் ஆற்றில் இறங்குவது கால தாமதம் ஆகிவிடும் என்ற காரணத்தினால் தல்லா குளம் பெருமாள் கோவி லில் இருந்து இருந்து நேரடியாக வைகை ஆற்றை நோக்கி சுவாமி அழகர் வருகை புரிந்தார் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.  இதுபற்றி மண்டகப்படி உபயதாரர்கள் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் சித்திரை திருவிழா கொண்டாடப்படாதது மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது.இதையொட்டி இந்த வருடம் கொண்டாடும் இந்த வேலையில் எல்லாம் மண்டகப்படி உபயதாரர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். அதேபோல் இந்த வருடமும் மண்டகப்படி வந்து காட்சி தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட நேரம் காலதாமதம் ஆகிவிட்டது. அதனால் எந்தவித மண்டபம் செல்லாமல் நேராக வைகை ஆற்றுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் இதற்கான தொகையை மட்டும் வசூல் செய்து முன்தினம் 2 மணி நேரத்திற்கு முன்பாக வந்து சில மண்டகப்படி உபயதாரர்களிடம் கோவில் நிர்வாகம் பணத்தை வசூல் செய்தனர். 

அப்போது கோவில் நிர்வாக ஊழியர்கள் மண்டகப்படி உபயதாரர்களிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல்  இருந்தனர். இது பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி வரும் காலங்களிலாவது இதற்கான ஏற்பாடுகளை முறையாக  கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக  நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News