செய்திகள்
விளாத்திகுளம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-10 13:17 GMT   |   Update On 2021-01-10 13:17 GMT
விளாத்திகுளம் அருகே மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம்:

விளாத்திகுளம் தாலுகா புதூர் யூனியனுக்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் மற்றும் கோவில் குமரெட்டியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 2,500 ஏக்கர் அளவில் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, உளுந்து, வெள்ளைச் சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் விதைக்கப்பட்டு உள்ளன.

தற்போது விளாத்திகுளம், புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அனைத்து விவசாய பயிர்களும் மழைநீரில் மூழ்கி அழுகி வருகிறது.

இதனால் விவசாயிகள் விவசாய பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று துரைச்சாமிபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு துரைச்சாமிபுரம் மற்றும் கோவில்குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கூடி மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Tags:    

Similar News