செய்திகள்
யானைகள் கூட்டமாக ரோட்டை கடந்து சென்ற காட்சி

கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டை கடந்து சென்ற யானை கூட்டம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Published On 2019-12-03 12:15 GMT   |   Update On 2019-12-03 12:15 GMT
கோவையில் இன்று காலை 7 மணியளவில் யானை கூட்டம் ரோட்டை கடந்து சென்ற சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

யானை-மனித மோதலை தடுக்க வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை 7 மணியளவில் கோவை-மேட்டுப்பாளையம் மெயின் ரோடு நரசிம்ம நாயக்கன்பாளையம் நாராயணன்மில் அருகே ரோட்டை கடப்பதற்காக 6 யானைகள் கொண்ட யானை கூட்டம் வந்து நின்றது. இதனை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனங்களை அப்படியே நிறுத்தினர்.

பின்னர் யானைகள் ரோட்டுன் நடுவே இருந்த தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு ரோட்டை கடந்து சென்றது.

பின்னர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்த வன ஊழியர்கள் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இதனால் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News