செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.

டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்- காங்கிரசார் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்

Published On 2021-07-22 09:45 GMT   |   Update On 2021-07-22 14:44 GMT
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து கண்டன கோ‌ஷம் எழுப்பப்பட்டது.
சென்னை:

இஸ்ரேல் மென்பொருள் மூலம் நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்கள் போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

இந்த விவகாரத்தால் பாராளுமன்றமும் முடங்கியது. வருகிற 28-ந்தேதி பாராளுமன்ற கூட்டுக்குழு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் மோடி அரசை கண்டித்து போராட்டம் நடத்துகின்றன.

சென்னையில் இன்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.

அதன்படி சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு காங்கிரசார் திரண்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து கண்டன கோ‌ஷம் எழுப்பப்பட்டது.


பின்னர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், மாநில நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, சிரஞ்சீவி, ரங்கபாஷ்யம், மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா, மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகர், எம்.எஸ்.திரவியம், எம்.ஏ. முத்தழகன், நாஞ்சில் பிரசாத், ரஞ்சன்குமார், டில்லிபாபு, அடையாறு துரை மற்றும் திருவான்மியூர் மனோகரன், மைலை தரணி, அகரம் கோபி, ஏழுமலை, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News